உத்தரப்பிரதேசத்தில் பெரிய கிராமங்களில் ஒன்றான மதுராவில், நேற்று பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அவற்றின் விவம் பின்வருமாறு...
பெண்கள் போன் பேசிகொண்டே சாலையில் நடந்தால், 21,000 அபராதம். பெண்களின் கவனக் குறைவைப் போக்கவே இந்த உத்தரவாம். மது விற்பனை செய்வோருக்கு, 1.11 லட்சம் ரூபாய் அபராதம். பசு வதை செய்வோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம். இந்த உத்தரவுகள், அனைத்து கிராம மக்களின் சம்மதத்துடன் பிறப்பிக்கப்படும்' என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவுகளால், தற்போது மதுரா கிராமம் பிரபலமாகிவிட்டது. கடந்த 2014 -ஆம் ஆண்டு, மதுராவில் லோக்சபா தேர்தலில்போது, சாலைகள் அமைக்கப்படவில்லை என்பதற்காக 2000 பேர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. எனவே, அதிரடி காட்டுவது இது மதுராவுக்கு புதிதல்ல.