தேசிய செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவுடன் மாயாவதி சந்திப்பு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார்.

தினத்தந்தி

80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம், மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சியை தீர்மானம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது, காங்கிரசை கழற்றிவிட்டது. மறுபுறம் காங்கிரஸ் பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கியது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்கு பிரியும் என்றே பார்க்கப்பட்டது.

இப்போது தேர்தலுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவு தொகுதி கிடைக்குமா? என்ற கேள்வி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கூட்டணி சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து 78 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே நீண்ட நேரம் ஆலோசனை நடைபெற்றுள்ளது. என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை. இருவரையும் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்