தேசிய செய்திகள்

மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீட்டு மனு தாக்கல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீடு கொள்கை தொடர்பான அறிவிப்புக்கு எதிராக கோவாவைச் சேர்ந்த 17 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் மத்திய அரசு கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து, மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, இந்த இடஒதுக்கிட்டை பின்பற்றாமல் நடத்த மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், திமுக சார்பில் வழக்கறிஞர் நெடுமாறன், ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதன்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க கூடாது என்றும் இந்த வழக்கில் திமுகவை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது