தேசிய செய்திகள்

டெல்லியில் பிரியங்கா காந்தியுடன் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை!

ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற இருந்த காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற இருந்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தெலுங்கானா மாநில முங்கோடு தொகுதி இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க, அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுகூடி ஆகஸ்ட் 23ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தியை சந்திக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் ஒருநாள் முன்கூட்டியே நடைபெறுகிறது.

கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்