தேசிய செய்திகள்

பிரதமர் வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்க நாராயணசாமியுடன் சந்திப்பு: கிரண்பேடி

பிரதமர் வருகையை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக முதல் அமைச்சர் நாராயணசாமியை சந்தித்தேன் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் உள்ள ஆரோவில் உதய தின விழாவில் பங்கேற்க வருகிற 28ந்தேதி அந்த மாநிலத்திற்கு வருகை தர இருக்கிறார்.

இந்த நிலையில், அவரது வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக முதல் அமைச்சர் நாராயணசாமியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக முதல் அமைச்சர் நாராயணசாமியை சந்தித்தேன். புதுச்சேரி மாநில வளர்ச்சி, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பற்றி அவருடன் ஆலோசனை மேற்கொண்டேன் என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்