தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் - கர்நாடக மந்திரி குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்வதாக கர்நாடக மந்திரி குற்றம் சாட்டினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருப்பது பற்றி, பெங்களூருவில் கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார். இந்த பிரச்சினை அவரது கழுத்தை நெரிக்கிறது. தமிழக மக்களை திருப்திபடுத்த வேண்டிய நிலையும் அவருக்கு உள்ளது. மேகதாதுவில் புதிய அணைகட்டுவது கர்நாடகம், தமிழகத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும். எனவே மேகதாதுவில் அணைகட்டுவதை தமிழக மக்கள் எதிர்க்க வேண்டியது இல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழகத்தை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்