தேசிய செய்திகள்

மேகாலயா: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை, தொங்கு சட்டமன்றம் அமைகிறது

மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடம் கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைகிறது. #MeghalayaElection2018

ஷில்லாங்,

பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மேகலாயாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில், காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களை அந்த கட்சியால் எட்ட முடியவில்லை. காங்கிரஸ் 21 இடங்களிலும் நாகா மக்கள் முன்னணி கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாரதீய ஜனதா கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி 6 இடங்களில் வென்றுள்ளன. பிற கட்சிகள் 11 இடங்களில் வென்றுள்ளன. எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், மேகாலயாவில் தொங்கு சட்ட சபை அமைய உள்ளது. பிற கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி மேகாலயாவில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...