தேசிய செய்திகள்

தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை பாஜக ஏற்படுத்துகிறது என்று மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

தேசப் பாதுகாப்பு என்ற பெயரால், அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது பாஜக; என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

இதுகுறித்து மெகபூபா வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும், அவர்களது செயல்பாட்டையும் கூறி இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜகவினர் எண்ணியிருந்தனர். தற்போது, இவை எதுவும் வெற்றிக்கு உதவி செய்யாது என்று கருதிய பாஜக விரக்தியடைந்து விட்டது.

இதனால், தற்போது தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி, பாலாகோட்டில் நடத்தியதைபோல மீண்டும் ஒருமுறை தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்