ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. அதன் தலைவராக மெஹபூபா முப்தி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2ந்தேதி அக்கட்சியின் தலைவராக முப்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தொடர்ச்சியாக 6வது முறையாக அவர் இப்பதவிக்கு தேர்வாகியுள்ளார்.
இதனை அடுத்து கட்சியின் துணை தலைவர் பதவிக்கு மூத்த தலைவரான முகமது சர்தாஜ் மத்னியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், துணை தலைவருக்கான பதவிக்கு மூத்த தலைவர் மத்னியின் பெயரை முதல் மந்திரி முப்தி பரிந்துரைத்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.