தேசிய செய்திகள்

தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவல் துணை ஆய்வாளருக்கு முப்தி இரங்கல்

ஸ்ரீநகரில் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட காவல் துணை ஆய்வாளருக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் மந்திரி மெஹபூபா முப்தி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் இருந்து கந்தர்பல் செல்லும் சாலையில் ஜகுரா என்ற பகுதியில் கார் ஒன்றில் வந்த 3 தீவிரவாதிகள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் காவல் துணை ஆய்வாளர் இம்ரான் தக் என்பவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் முதல் மந்திரி முப்தி, எந்த இலக்கையும் அடைவதற்கு வன்முறை உதவாது. அதற்கு பதிலாக சமூகத்தின் மொத்த கட்டுக்கோப்பையும் அது கிழித்தெறியும் என கூறினார். பலியான இம்ரானின் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களையும் அவர் தெரிவித்து கொண்டார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்