தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்த மனநலம் பாதிப்படைந்த பெண்ணுக்கு அடி உதை

குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்த மனநலம் பாதிப்படைந்த பெண்ணை கடத்தல் நபர் என சந்தேகித்து உள்ளூர் மக்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

துப்குரி,

மேற்கு வங்காளத்தின் வடக்கே ஜல்பைகுரி மாவட்டத்தில் துப்குரி நகரில் பரோகரியா பகுதியில் மனநலம் பாதிப்படைந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்துள்ளார். அவர் தனது கையில் வைத்திருந்த கேண்டி மிட்டாய்களை அங்கிருந்த குழந்தைகளுக்கு கொடுத்திருக்கிறார்.

இதனை கவனித்த உள்ளூர் மக்கள் அந்த பெண் குழந்தை கடத்த வந்தவர் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் ஒன்று கூடி அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

அவர்களிடம் இருந்து பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி பரோகரியா பகுதியில் வசித்து வரும் சமீர் ராய் என்பவர் கூறும்பொழுது, குழந்தை கடத்தல் சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன. அந்த பெண்ணிடம் கேண்டி மிட்டாய்கள் இருந்தன என கூறியுள்ளார்.

இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை எங்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீஸ் சூப்பிரெண்டு அமிதவா மைதி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...