தேசிய செய்திகள்

பெண்கள் மீது கருணை; 55 பெண் ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்ய ஆந்திர அரசு முடிவு

ஆந்திர பிரதேசத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள 55 பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தில் முதல் மந்தரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. இதுபற்றி மாநில உள்துறை மந்திரி மேகதொட்டி சுசரிதா கூறும்பொழுது, இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை.

147 பெண் கைதிகள் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்களில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்த 55 பேர் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதுபற்றி பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு அடுத்த வாரம் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

பெருமளவிலான ஆயுள் குற்றவாளிகள் குற்ற செயலில் அதிகம் பங்கு இல்லாதவர்களாக உள்ளனர். அவர்கள் சூழ்நிலைக்கு பலியானவர்களாக உள்ளனர். இந்த குற்ற செயலை மீண்டும் அவர்கள் செய்யும் வாய்ப்பு குறைவு.

நம்முடைய முதல் மந்திரி பெண்கள் மீது கருணை கொண்டவர். இந்த வரலாற்று முடிவால் மீண்டும் அது நிரூபிக்கப்பட்டு உள்ளது. மகளிரை சிறையில் இருந்து விடுவிப்பது சமூகத்திற்கு பலனளிக்கும் என கூறியுள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?