நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:
- RT- PCR பரிசோதனையை 70 சதவீதம் அளவில் மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை செய்ய வேண்டும்.
- மாநிலங்களுக்கு இடையே தனி நபர் நகர்வு போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை
- மாநிலத்திற்குள் தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு கட்டுப்பாடு தேவையில்லை
- பொது இடங்கள் பணியிடங்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக மநில அரசுகள் வெளியிட வேண்டும்.
- சூழலை பொறுத்து மாவட்ட, நகர அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம். தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 முதல் அமலில் இருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.