புதுடெல்லி,
நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கொரோனாவால் இறப்பவர்களில் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.