தேசிய செய்திகள்

கம்ப்யூட்டரின் ‘விண்டோஸ் 10’ இயக்க முறையில் ‘தமிழ்-99 கீபோர்டு’ - மைக்ரோசாப்ட் அறிமுகம்

கம்ப்யூட்டரின் விண்டோஸ் 10 இயக்க முறையில் தமிழ் 99 கீபோர்ட்ஐ மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கம்ப்யூட்டரில் எளிய முறையிலும், வேகமாகவும் தமிழ் எழுத்துக்களை டைப் செய்வதற்கு உருவாக்கப்பட்ட தரமிக்க தமிழ் 99 கீபோர்டை தமிழக அரசு கடந்த 1999-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் பல்வேறு விண்டோஸ் இயக்க முறையில் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) இந்த கீபோர்டு இணைக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக விண்டோஸ் 10 இயக்க முறையிலும் தமிழ் 99 கீபோர்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழ் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த முடியும்.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை அதிகாரி மீதுல் படேல் கூறுகையில், இந்திய மொழி தொழில்நுட்பங்களுக்கு இன்ஸ்கிரிப்ட் கீபோர்டு உள்பட அனைத்து தேசிய அளவிலான தரத்துக்கும் மைக்ரோசாப்ட் உறுதியளிக்கிறது. விண்டோஸ் 10 இயக்க முறையில் தமிழ் 99 கீபோர்டை இணைத்திருப்பது மற்றொரு முக்கியமான நடவடிக்கை ஆகும் என்று தெரிவித்தார்.

இந்த புதிய வழிமுறையை ஹார்டுவேர் மற்றும் தொடுதல் (டச் கீபோர்டு) என இரண்டு முறையிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து