தேசிய செய்திகள்

சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பொதுமக்கள், போலீசார் மீது கல்வீச்சு

சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பொதுமக்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வஸ்த்ராபூர் இணைப்பு சாலையில் நேற்று சுமார் 100 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பவர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்