தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கைது; ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு காஷ்மீரில் கிஸ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள சவுந்தர் என்ற கிராமத்தில், பதுங்கியிருந்த பயங்கரவாதி தரிக் ஹுசைன் வானி என்பவனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

கைது செய்ய முயன்ற போது, ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதியின் காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பயங்கரவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்