ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் வடக்குப்பகுதி மாவட்டமான பந்திப்போரவில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. குரேஸ் செக்டாரின் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்திய பகுதிக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதை ராணுவம் கண்டறிந்ததையடுத்து, பயங்கரவாதிகள் ராணுவத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அப்பகுதியில் வேறு எதுவும் பயங்கரவாதிகள் உள்ளனரா?என்ற தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 தினங்களில் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.