தேசிய செய்திகள்

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதியை சுட்டு கொன்றனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காஷ்மீர் மாநில சிறப்பு அதிரடி படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் இணைந்து ராணுவம் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது.

அவர்கள் இந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையும் பதிலடி தந்தது.

இந்த என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து தேடுதல் வேட்டை நிறைவடைந்து உள்ளது என தகவல்கள் தெரிவித்துள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்