தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் காயம்

விபத்தில் காயமடைந்த வீரர்கள், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினத்தந்தி

காங்கர்,

சத்தீஷ்கார் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் உள்ள புல்பட் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாம் உள்ளது. இந்த முகாமில் தங்கியிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்கள் 17 பேர் விடுமுறையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல தயாராகினர். இதற்காக வீரர்கள் 17 பேரும் புல்பட் கிராமத்தில் இருந்து அந்தகார் ரெயில் நிலையத்துக்கு மினி லாரியில் புறப்பட்டனர்.

இந்த லாரி கும்ஹாரி கிராமத்துக்கு அருகே அந்தகார்-நாராயண்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய லாரி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்