தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் சாமி தரிசனம்

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

அந்த வகையில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருப்பதிக்கு வரும் போதெல்லாம் ஒரு நேர்மறை ஆற்றலை உணர முடிகிறது. இதன் மூலம் மக்களுக்கான பணியை செய்வதற்கான உத்வேகம் கிடைக்கிறது.

இந்திய மக்களின் நன்மைக்காகவும், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்காகவும் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் போது நாங்கள் மேலும் ஆற்றல் பெற்றவர்களைப் போல் உணர்கிறோம்" என்று தெரிவித்தார். 

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்