தேசிய செய்திகள்

சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் மாதம் நடைபெறும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில், 2020 கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே மாதம் 12 ஆம் தேதியில் இருந்து 23 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்த விழா ஜுன் இறுதி அல்லது ஜுலை துவக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதற்கான தொடக்க விழா, காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது.

இந்த ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்பதற்கான நிகழ்ச்சியை காணொலி மூலம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்