தேசிய செய்திகள்

பத்ம விருது உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே இணையதளம் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

பத்ம விருது உள்ளிட்ட தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகப்படுத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் முகமைகளின் அனைத்து விருதுகளையும் ஒருங்கிணைத்து கொண்டுவர, பொதுவான தேசிய விருது இணையப்பக்கம் https://awards.gov.in மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையையும், பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்காக விருதுகளுக்கு தனிநபர்களை அல்லது நிறுவனங்களை பரிந்துரை செய்யும் குடிமக்கள் அல்லது அமைப்புகளுக்கு இந்த இணையப்பக்கம் வசதி செய்கிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதனை நினைவூட்டி உள்ளது. இதன்படி பத்ம விருது உள்பட பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு இணைய பக்கத்தை பார்வையிடுமாறு அமைச்சகம் கேட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்