தேசிய செய்திகள்

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி மனு: வசீம் ரிஸ்வி தலையை கொண்டுவருபவருக்கு ரூ 11 லட்சம் பரிசு அறிவித்தவர் மீது வழக்கு

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி மனு; வசீம் ரிஸ்வி தலையை கொண்டுவருபவருக்கு ரூ 11 லட்சம் பரிசு அறிவித்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி உத்தரபிரதேச ஷியா மத்திய வக்புவாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன" என்றும் அவை உண்மையான குர்ஆனின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் பின்னர் ஒரு காலத்தில் செருகப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி ரிஸ்வி விளம்பரத்திற்காக இதனை செய்து உள்ளதாக கூறினார்.

மஜ்லிஸ்-இ-உலமா-இ-ஹிந்தின் பொதுச் செயலாளர் மவுலானா கல்பே ஜவாத், ரிஸ்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். லக்னோவின் பரா இமாம்பராவுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குர்ஆனைப் பாதுகாப்பதற்காக ஒரு அரங்கையும் ஏற்பாடு செய்தார்.

இதனிடையே, வசீம் ரிஸ்வியின் தலையைகொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசு தருவதாக கடந்த 13-ம் தேதி அமீருல் ஹசன் ஜாப்ரி என்பவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. அமீருல் ஹசன், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில், அமீருல் ஹசன் மீது மொராதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து மொரதாபாத் மாவட்ட ஏஎஸ்பி அமீத் குமார்ஆனந்த் கூறும்போது, இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்கி பகையை வளர்க்கும் வகையில் வழக்கறிஞர் அமீருல் ஹசனின் வீடியோ உள்ளது. இதற்கான சாட்சியங்கள் கிடைத்தவுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு