தேசிய செய்திகள்

மே மாதத்தில் போடப்பட்ட தடுப்பூசிகள் பற்றி வெளியானது தவறான தகவல் - மத்திய அரசு விளக்கம்

மே மாதத்தில் போடப்பட்ட தடுப்பூசிகள் பற்றி வெளியான தவறான தகவல் பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது, ஆனால் மே மாதத்தில் 7 கோடியே 90 லட்சம் தடுப்பூசி கிடைத்ததில் 5 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள்தான் மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் போடப்பட்டுள்ளன என சில ஊடகங்களில் தகவல் வெளியானதாக தெரிகிறது.

இது தவறான தகவல், அடிப்படையற்றது என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு:-

* மே 1 முதல் 31 வரையில், 6 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் மாநில அரசுகளாலும், யூனியன்பிரதேசங்களாலும் போடப்பட்டுள்ளன.

* மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பாக 1 கோடியே 62 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன.

* 7 கோடியே 94 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

இவ்வாறு அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்