தேசிய செய்திகள்

மிஷன் சக்தி வெற்றியென மோடி முழக்கம்... பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துகள் ராகுல் ‘டுவிட்’

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளது. இன்று வரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன.

இப்போது இந்தியா இந்த சோதனையை 4-வது நாடாக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. சோதனையும், ஏவுகணையும் முழுமையாக இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், இந்தியாவின் தற்காப்புக்காகவும் மட்டுமே என்றார்.

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்ததற்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உங்களுடைய பணியால் மிகவும் பெருமையடைகிறோம் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக அந்த டுவிட்டில், பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்