தேசிய செய்திகள்

மிசோரத்தில் மீண்டும் மது விலக்கு அமல்

மிசோரம் மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஐஸ்வால்,

மிசோரமில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. இந்த சூழலில், கடந்த 2015-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற முந்தைய காங்கிரஸ் அரசு, மதுக்கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த மிசோ தேசிய முன்னணி அரசு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி தற்போது பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மாநில கலால் மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆணையர் கூறுகையில், சட்டப்பேரவையில் மிசோரம் பூரண மதுவிலக்கு சட்டம், 2019 மார்ச் 20-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஏப்ரல் 1-ஆம் தேதி பூரண மது விலக்கை அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், பூரண மதுவிலக்குக்கான அறிவிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு