தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபைக்கான துணை சபாநாயகராக எம்.எல்.ஏ. ராஜவேலு பொறுப்பேற்பு

புதுச்சேரி சட்டசபைக்கான துணை சபாநாயகராக எம்.எல்.ஏ. ராஜவேலு இன்று பொறுப்பேற்று கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலு நெட்டப்பாக்கம் தொகுதியில் இருந்து போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் 15வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திருக்குறளுடன் தனது உரையை தொடங்கி அவையில் பேசினார். புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக அவர் தமிழில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலு பதவியேற்று கொண்டார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் ராஜவேலுவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். புதுச்சேரியில் இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்