ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ஷாஜகாபூரில் 2 ஜீப்புகளில் மர்மநபர்கள் பசு மாடுகளை கடத்தி வந்தனர். தகவல் அறிந்த போலீசார், அவர்களை பிடிப்பதற்காக சாலையில் தடுப்புகளை வைத்தனர். ஆனால் ஒரு ஜீப் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் வேகமாக சென்றது. உடனே விரட்டிச்சென்ற கிராம மக்கள், அந்த ஜீப்பை வழிமறித்து நிறுத்தினர்.
அதில் இருந்த 7 பசு மாடுகளை மீட்ட பொதுமக்கள், பசுக்களை கடத்திய முன்பெத் கான் என்பவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். விரைந்து சென்ற போலீசார் முன்பெத் கானை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் மீது ஏற்கனவே பசு மாடு கடத்தியதாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.