ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் சரோர் பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் கன்று குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு கும்பல் எடுத்து வந்து ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று கும்பலை கலைக்க முயற்சித்தனர். போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்துள்ளனர். இதில் சில வாகனங்கள் சேதமடைந்தன.
இதுபற்றிய வதந்தி பரவாமல் தடுப்பதற்காக மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிக தடை செய்யப்பட்டு உள்ளது என துணை ஆணையாளர் ராஜீவ் ரஞ்சன் கூறினார். கன்றின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.