புதுடெல்லி,
பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதெடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒருபகுதியாக காட்டும் வகையில் சீன மெழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்சிஓ மாநாட்டில் சீனா வழங்கி உள்ளது. பிரதமர் மேடி இந்த கூட்டத்துக்கு சென்று இந்தியாவின் தேசநலனுக்கு துரேகம் செய்தார்.
1995ம் ஆண்டு பரஸ்பரம் ஒபபுக்கெண்ட எல்லை கட்டுப்பாட்டு கேடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இன்னும் விழி மேல் விழிவைத்து பார்த்து கெண்டிருக்கிறது. ஆனால் மேடி இன்னும் ஒன்றும் நடக்காதது பேன்ற மனநிலையிலேயே உள்ளார்" என சாடியுள்ளார்.