தேசிய செய்திகள்

மோடிக்கு வந்த பரிசுகள் ஏலத்தில் விற்பனை

மோடிக்கு வந்த பரிசுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு தரப்பினரால் நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சால்வைகள், அங்க வஸ்திரங்கள், தலைப்பாகைகள், பிற கைவினைப்பொருட்கள் என 2,700 நினைவுப்பரிசுகள் சேர்ந்துள்ளன. அவை இ- ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கான இ-ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. அடுத்த மாதம் 3-ந் தேதி வரை இந்த ஏலம் நீடிக்கிறது.

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மாதிரி மாட்டு வண்டியும் ஏலத்துக்கு வந்துள்ளது. இதன் தொடக்க விலை ரூ.1,000 ஆகும்.

இதை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலா துறை மந்திரி பிரகலாத் பட்டேல் ரூ.2,100-க்கு ஏலம் கேட்டுள்ளார்.

அடிப்படையில் விவசாயி என்பதால் இந்த மாதிரி மாட்டு வண்டியை பிரகலாத் பட்டேல் ஏலம் கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரி மாட்டுவண்டி அவருக்கு விற்பனை செய்யப்பட்டு, அவர் வீட்டுக்கு எடுத்துச்செல்ல முடியுமா என்பது அடுத்த மாதம் 3-ந் தேதி தெரிந்து விடும்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...