புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை சாதனை அளவாக உயர்ந்து விட்டன. உக்ரைனில் இந்திய மாணவர்கள் தவித்து வருகிறார்கள். சீனா நமது நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
ஆனால், இந்த பிரச்சினைகளில் மத்திய அரசிடம் எந்த திட்டமிடலும் இல்லை. விளம்பரப்படுத்தும் வேலைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.