தேசிய செய்திகள்

முழு அடைப்பு போராட்டம்: தற்போதைய நிலைமைக்கு மோடி அரசே முழு பொறுப்பு - காங்கிரஸ் கருத்து

முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் தற்போதைய நிலைமைக்கு மோடி அரசே முழு பொறுப்பு என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன. இந்த போராட்டங்களுக்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போதைய நிலைமைக்கு மோடி அரசே முழு பொறுப்பு. மேலும் நாளை (இன்று) நடைபெறும் முழு அடைப்பால் பொதுமக்களுக்கு ஏதும் சிரமம் ஏற்பட்டாலும், அதற்கும் மத்திய அரசே பொறுப்பாகும். பெரு நிறுவனங்களை ஆதரிப்பதில், அமெரிக்காவை மத்திய அரசு பின்பற்றுகிறது. தயவு செய்து அமெரிக்காவை பின்பற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

வேளாண் துறை கார்ப்பரேட்மயம் ஆவது ஏற்க முடியாது எனவும், இதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறிய ஜாக்கர், இந்த சட்டங்களை கொண்டு வந்ததில் ஏதோ மர்மம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் நாட்டு மக்களை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு