தேசிய செய்திகள்

பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்: தெலுங்குதேசம்

பாலகோட் தாக்குதலில் ஆதாயம் தேடும் மோடி அரசு புல்வாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

விசாகப்பட்டணம்,

தெலுங்குதேசம் கட்சியின் செய்தி தொடர்பாளர் தினகர் லங்கா கூறியதாவது:

காஷ்மீர் புலவாமா பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் அஜாக்கிரதையே காரணம். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2017ம் ஆண்டே மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு குண்டு துளைக்காத பஸ்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். தற்போது ராணுவ அமைச்சகத்தில் அதுபோன்ற 200 பஸ்கள் உள்ளன. ஆனால் இன்னும் அந்த படைகளுக்கு அவை கிடைக்கவில்லை. அந்த பஸ்கள் எங்கே?

பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் நடந்த வான் தாக்குதலை உடனடியாக தனது ஆதாயத்துக்கு பயன்படுத்திய மோடி அரசு, காஷ்மீர் புலவாமா தாக்குதலுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்