தேசிய செய்திகள்

மோடி, வளர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ளார், சாதி அரசியல் செய்யவில்லை - அருண் ஜெட்லி பதிலடி

பிரதமர் மோடி, வளர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர் சாதி அரசியல் செய்யவில்லை என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், பிரியங்கா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.

அதற்கு பதிலளித்து, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:-

பிரதமர் மோடி, ஒருபோதும் சாதி அரசியல் செய்ததில்லை. அவர் வளர்ச்சி அரசியலில்தான் ஈடுபட்டுள்ளார். அவர் தேசியத்தால் கவரப்பட்டவர்.

சாதியின் பெயரால் ஏழைகளை ஏமாற்றியவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். சாதி அரசியலின் பெயரில் அவர்கள் சொத்துகளை குவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தலைமை குடும்பங்களின் சொத்துகளுடன் ஒப்பிடும்போது, பிரதமரின் சொத்து மதிப்பு வெறும் 0.01 சதவீதம்தான். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு