தேசிய செய்திகள்

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

ஆயிரக்கணக்கான கோடிகள் செலவும் செய்து கட்டமைக்கப்பட்ட மோடி பிம்பம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார். நாட்டின் நலனில் மோடி சமரசம் செய்துவிட்டார். பிரதமர் மோடி கலக்கத்தில் உள்ளார். நான்கு மாதங்களாக எந்த முன்னேற்றமும் இன்றி வர்த்தக ஒப்பந்தம் இருந்தது.

எதுவுமே மாறாத நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடிகள் செலவும் செய்து கட்டமைக்கப்பட்ட மோடி பிம்பம் உடைந்துள்ளது. பிரதமர் மோடி சமரசம் ஆகிவிட்டார் என்பதுதான் உண்மை. இதை செய்தது யார்? எப்படி செய்தார்கள் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்

அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி மீதான வழக்குதான்.எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இவைதான் அந்த இரண்டு அழுத்தப் புள்ளிகள்" இவ்வாறு அவர் பேசினார்.

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?

என்னென்ன அமெரிக்க வேளாண் விளைபொருட்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி