தேசிய செய்திகள்

இந்தியாவை கட்டமைத்ததில் அம்பேத்காரின் பங்கு மிக முக்கியமானது: பிரதமர் மோடி

இந்தியாவை கட்டமைத்ததில் அம்பேத்காரின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- தேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்காரின் பங்கு மிக முக்கியமானது. அவரின் புகழையும், செயல்பாட்டையும் மறைக்க பல முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. மக்களின் மனங்களில் இருந்து அம்பேத்கரின் செல்வாக்கை அழிக்கவும் முயற்சி நடந்துள்ளது. ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அம்பேத்காரின் வாழ்க்கையை நினைவு கூறும் இடங்களை இந்த அரசு பாதுகாத்து வருகிறது. வாக்கு வங்கிக்காக மட்டுமே காங்கிரஸ் அம்பேத்காரின் பெயரை பயன்படுத்தி வந்துள்ளது. இந்த மையம் இளைஞர்களுக்கானது என்று நான் கருதுகிறேன். இந்த மையத்தில் பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை இளைஞர்கள் புரிந்து கொள்ள முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை