தேசிய செய்திகள்

தேர்தல்களின்போது ராணுவ அணிவகுப்புடன் மோடி பிரசாரம் செய்யலாம் - யஷ்வந்த் சின்கா கிண்டல்

இனிவரும் தேர்தல்களின்போது ராணுவ அணிவகுப்புடன் மோடி பிரசாரம் செய்யலாம் என்று யஷ்வந்த் சின்கா கிண்டல் செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று பூர்வாஞ்சல் விரைவு சாலையை திறந்து வைத்தார். அதற்காக போர் விமானத்தில் வந்து அந்த சாலையில் தரை இறங்கினார். அதைத்தொடர்ந்து, இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதை சுட்டிக்காட்டி, பா.ஜனதாவில் முன்பு இருந்தவரும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்கா, மோடியை கிண்டல் செய்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இனிமேல் உத்தரபிரதேசத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வரும்போதெல்லாம், குடியரசு தின அணிவகுப்பு பாணியில் ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். விமானப்படை விமானங்கள் சாகசம் நிகழ்த்த வேண்டும். இவை அனைத்தும் அரசு செலவில் நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது