தேசிய செய்திகள்

ஜின்பிங்குடன் மோடி தொலைபேசியில் பேச்சு

சீன அதிபராக ஜின்பிங் தொடர்ந்து 2–வது முறையாக தேர்வு பெற்று, கடந்த 17–ந் தேதி பதவி ஏற்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

அதில் அவர், சீன மக்கள் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்வு பெற்றதற்கு பாராட்டுக்கள். நமது இரு தரப்பு உறவுகள் மேலும் மேம்படுவதற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்து இருக்கிறேன் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர், ஜின்பிங்குக்கு தன் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது, ஒட்டுமொத்த சீன தேசமும் அவருக்கு ஆதரவு தருவதை காட்டுவதாக ஜின்பிங்கிடம் மோடி தெரிவித்தார் என தகவல்கள் கூறுகின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை