தேசிய செய்திகள்

கம்போடியா பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்துள்ள கம்போடிய பிரதமர் சாம்டெக் ஹுன்சென் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில் இரு நாடுகள் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்துள்ள கம்போடிய பிரதமர் சாம்டெக் ஹுன்சென் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் கலாசாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதித்தனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகள் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் புலன் விசாரணை, உயர்மட்ட ராணுவ அதிகாரி ஒருவரை மாற்றிக்கொள்வது உள்ளிட்ட ராணுவ ஒப்பந்தம், ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு, கலாசார பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதுதவிர கம்போடியாவில் நீராதார மேம்பாட்டு திட்டத்துக்கு இந்தியா சுமார் ரூ.235 கோடி கடன் வழங்குவது என்றும் முடிவானது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு