தேசிய செய்திகள்

வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு மோடி நன்றி

வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அவர்களுக்கு மோடி நேற்று நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இந்தோனேஷிய அதிபர் ஜேகோ விடோடு, நைஜீரிய அதிபர் முகமது புஹாரி, சவுதி அரேபிய மன்னர் சல்மான், ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்சோ மங்காவா உள்ளிட்டோருக்கு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நாடுகளுடன் உறவை மேம்படுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு வாழ்த்து கூறிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாடகி ஆஷா போஸ்லே, சச்சின் டெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தடகள வீரர் நீரஜ் சோப்ரா, சரோட் இசை மேதை அம்ஜத் அலிகான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், மாதவன், நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ரவீணா தாண்டன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்