தேசிய செய்திகள்

மோடி அலை மங்கிவிட்டது, இந்தியாவை வழி நடத்த ராகுல் தயாராக உள்ளார்: சிவசேனா எம்.பி

மோடி அலை மங்கிவிட்டதாகவும் இந்தியாவை வழி நடத்தும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளதாகவும் சிவசேனா எம்.பி தெரிவித்துள்ளார்.

மும்பை,

மோடி அலை மங்கிவிட்டதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியாவை வழிநடத்தும் தகுதி உள்ளதாகவும் சிவசேனா எம்.பி சஞ்செய் ராவத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்செய் ராவத் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டை வழி நடத்தும் தகுதி உள்ளது.

ராகுல் காந்தியை பப்பு(சின்ன பையன்) என அழைப்பது தவறு. நாட்டின் மிகப்பெரிய அரசியல் சக்தி யார்?எனில் மக்கள்தான். வாக்காளர்களால் யாரையும் பப்புவாக்க முடியும். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தற்போது அந்த அலை ஒய்ந்துவிட்டது போல தெரிகிறது. குஜராத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கும் போது, குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு சவாலாகவே இருக்கும் என தெரிகிறது என்றார்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி, அண்மைக்காலமாக மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனா கட்சி பிரதமர் மோடியை விமர்சித்து இருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்