தேசிய செய்திகள்

மோடியின் ஆட்சி 100-வது சுதந்திர தினம் வரை தொடரும் - ராம் மாதவ் சொல்கிறார்

மோடியின் ஆட்சி 100-வது சுதந்திர தினம் வரை தொடரும் என ராம் மாதவ் கூறி உள்ளார்.

தினத்தந்தி

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து அகர்தலாவில் வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா பொதுச் செயலாளர் ராம் மாதவ் கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இப்போதுவரை இதுவே மிக நீண்ட ஆட்சியாக உள்ளது. ஆனால் இந்த சாதனையை நரேந்திர மோடி முறியடிப்பார். இந்த தேர்தலில் பா.ஜனதா 6 கோடி புதிய ஓட்டுகள் உள்பட 23 கோடி ஓட்டுகள் பெற்றுள்ளது. இது வருகிற தேர்தல்களிலும் தொடரும். இந்தியாவின் சுதந்திர தின நூற்றாண்டு விழா வரை (2047) மோடியின் ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு