நாக்பூர்
2003ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் முகமது ஹனிப் சையத் என்பவர் உள்பட மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நாக்பூர் மத்திய சிறைச்சாலையில் இருந்துவந்தார். இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அடுத்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.