தேசிய செய்திகள்

பாலியல் வன்முறை: சிறுமிக்கு மொட்டை, குடும்பத்தினர் விருந்து வைக்க பஞ்சாயத்து உத்தரவு

பாலியல் வன்முறைக்கு ஆளான 12 வயது சிறுமிக்கு மொட்டை அடித்து விருந்து வைக்க பஞ்சாயத்து தலைவர்கள் உத்தரவிட்ட கொடுமை நடந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சட்டீஸ்காரில் கடந்த ஜனவரி 21ந்தேதி மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடந்து வந்த வீடு கட்டும் பணியில் 12 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் ஈடுபட்டு இருந்துள்ளனர். அங்கு வந்த அர்ஜூன் யாதவ் என்ற வாலிபர் சிறுமியை பாலியல் வன்முறை செய்து விட்டு தப்பியோடி விட்டான்.

இந்த சம்பவத்திற்கு மறுநாள் சிறுமியின் சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டம் நடத்தியுள்ளனர். அங்கு குற்றவாளி அர்ஜூன் கொண்டு வரப்பட்டு உள்ளான். குற்றவாளி என பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட அந்த வாலிபர் அபராத தொகை செலுத்தி விட்டு சென்று விட்டான்.

அதன்பின்னர் பிப்ரவரி 4ந்தேதி மற்றொரு பஞ்சாயத்து கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிறுமியை குளிக்க வைத்து, மொட்டை அடித்துள்ளனர். அந்த சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இறைச்சி மற்றும் மதுபானம் உள்ளிட்ட பெரிய விருந்து வைக்க குடும்பத்தினருக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டது. சிறுமி புனிதம் அடைவதற்கான நடைமுறை இது என கிராம தலைவர் கூறியுள்ளார்.

இதுபற்றிய தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். பஞ்சாயத்து நடத்திய கிராமத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை