தேசிய செய்திகள்

பெங்களூரு அருகே நெலமங்களாவில் ரெயில் முன் பாய்ந்து தாய், மகன் தற்கொலை

பெங்களூரு அருகே நெலமங்களாவில் ரெயில் முன் பாய்ந்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களாவில் ரெயில் முன் பாய்ந்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

தாய், மகன் தற்கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே பைரநாயக்கனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலையில் ஒரு பெண்ணும், வாலிபரும் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்கள். இதை பார்த்து அதிச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தார்கள்.

முதலில் அவர்கள் 2 பேரையும் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் தற்கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பைரநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ரேகா (வயது 45), அவரது மகன் மனோஜ் (21) என்று அடையாளம் காணப்பட்டது.

கணவர் இறந்ததால்...

அதாவது ரேகா தனது மகனுடன் அதே கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரேகாவின் கணவர் இறந்து விட்டார். இதன் காரணமாக அவர் மனம் உடைந்து வாழ்ந்து வந்துள்ளார். கணவரை இழந்து விட்டதால் வாழ பிடிக்காமல் இருந்த ரேகா தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு அவரது மகனும் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறி ரேகாவும், மனோஜும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி