தேசிய செய்திகள்

குரங்கு அம்மைக்கு தடுப்பூசி -சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு

குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்தநிலையில் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா கூறுகையில், "குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவி உள்ளது. நாட்டு மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் முயற்சியில் தடுப்பூசி உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்