தேசிய செய்திகள்

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதனால், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கார் உத்தரவிட்டார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்