தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முன்னதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 20ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடைபெறும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்